சென்னை: சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, நடிகர் விஜய்க்கு திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, கோபாலபுரம் வட்டாரங்கள் கூறியதாவது: கேப்டனை கெஞ்சி கெஞ்சி அலுத்து விட்டதால் தலைவருக்கு இப்போ என்ன பண்றதுனே தெரியல. யாரையாவது, எப்படியாவது கூட்டணிக்கு கொண்டு வந்து அட் லீஸ்ட் தனக்கு ஒரு சீட்டு திருவாரூரில் ஜெயிக்கிற மாதிரி இருந்தா போதும்கிற அளவுக்கு வந்துட்டார். அதனாலதான் இளைய தல’வலி’ விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார். கட்சியில் தற்போது ஸ்டாலின் மட்டும் தான் தல’வலி’ யாக இருக்கார், கட்சில இன்னும் ரெண்டு மூணு தல’வலி’கள் இருந்தா நல்லதுதானே.
கலைஞரின் அழைப்பு குறித்து விஜய் பரிசீலித்து வருவதாகவும், விஜயகாந்த், சரத், நெப்போலியன் மாதிரி முதலில் திமுகவில் சேர்ந்து பின்னாளில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ் நாட்டுக்கு முதல்வர் ஆகலாம் என விஜய் நினைக்கிறார் என்றும் விஜய் முடிவு குறித்து கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.
There are no comments yet
Or use one of these social networks