சென்னை: கூட்டணிக்கு கெஞ்சி வரும் பாஜக மற்றும் திமுக கட்சிகளை திருப்திப்படுத்த கேப்டன் விஜயகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த இரண்டு கட்சிகளுடன் தனித் தனியாக கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளதாக உறுதிப்படு ‘த்தூ’ ம் செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து அரசியல் வட்டாரங்களில் கூறப்படுவதாவது: கேப்டன் இந்த தேர்தலில் எப்படியாவது ஒரு சீட்டாவது ஜெயிக்கணும்னு பார்க்கிறார். பாஜகவுடன சேர்ந்தால் அது நடக்காது, ஆனா மச்சான் சுதிஷுக்கு ராஜ்ய சபா எம்பி பதவி பாஜக வை விட்டால் வேறு யாரிடமும் கிடைக்காது. ஆகவே வரும் சட்ட மன்ற தேர்தலில் திமுகவுடன் பாதி சட்டமன்ற தொகுதிகளிலும், பாஜகவுடன் பாதி தொகுதிகளிலும் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளார். இதன்படி கருணாநிதியை குஜால் பண்ணி ஒன்றிரண்டு தொகுதிகளில் தானும், பிரேமலதாவும் எம்ல்ஏக்கள் ஆகி விடலாம். பாஜகவை குஷிப்படுத்தி மச்சான் சுதிஷுக்கு ராஜ்ய சபா எம்பி பதவி வாங்கிவிடலாம் என்றும் ஐடியா பண்ணி இருக்கிறார். மேலும் சுதிஷின் மனைவிக்கும், தனது இரண்டு மகன்களுக்கும் ஏதாவது பதவி வாங்க வேறு எந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம் என்று கேப்டன் தனது குடும்பத்தினருடன் சிங்கப்பூரில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
There are no comments yet
Or use one of these social networks