சென்னை: வரும் சட்டசபை தேர்தலில், மீண்டும் திருவாரூர் தொகுதியிலேயே போட்டியிட்டு முதல்வர் பதவியை கைப்பற்ற திமுக தலைவர் கருணாநிதி முடிவு செய்துள்ளது அனைவரும் அறிந்ததே. இந்த தேர்தலிலாவது முதல்வர் வேட்பாளராக தன்னை அப்பா அறிவிப்பார் என காத்திருந்த ஸ்டாலின் அதிர்ச்சியில் உள்ளதாக கோட்டூர்புர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மிகவும் விரக்தியில் உள்ள ஸ்டாலின், நெருங்கியவர்களிடம் ’93 வயசுல இன்னும் பதவி ஆசை விடவில்லை. இந்த தடவையும் எனக்கு முதலமைச்சர் நாற்காலியை விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டார். எனக்கும் அப்பாவுக்கும் நல்லா தெரியும் நாங்க ரெண்டு பேருமே இந்த தேர்தலில் முதலமைச்சர் ஆக மாட்டோம்னு, ஆனாலும் ஏதோ முதல்வர் வேட்பாளர் என்று ஒரு பேருக்கு இந்த தேர்தலில் போட்டியிடலாம்னா, இவரு அதுக்கு கூட விட மாட்டேன் என்கிறார். 62 வயசு ஆச்சு எனக்கு, பேரன் பேத்தி எடுத்து தாத்தா ஆயிட்டேன், இப்படியே போனா அரசியல்ல இருந்தே ஓய்வு எடுத்துட்டு , ரஜினி கூட சேர்ந்து இமய மலைக்கு போக வேண்டியதுதான் என்று புலம்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு அறிவாலய அறிவிலி கருத்து சொல்லும் போது ’62 வயசு தாத்தா ஸ்டாலின் இளைஞர் அணி தலைவராக இருந்துகிட்டு இப்படியெல்லாம் பேசுறது டூ மச்’ என்றார்.
There are no comments yet
Or use one of these social networks