சென்னை: சென்னை வெள்ளம் குறித்து, சமீபத்தில் மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகம் ஆய்வு மேற்கொண்டு அளித்த அறிக்கையில் “விரைவாக தமிழ்நாடு செயல்பட்டு இருந்தால் பேரிழப்பை தவிர்த்திருக்க முடியும்” என்றும் கூறியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இதற்கு பதிலடி கொடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று செய்தியாளர்களிடம் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் பேசும் போது கூறியதாவது: சென்னை வெள்ளத்தின் போது அரசு விரைவாக செயல்படவில்லை என ஆய்வு ஆய்வுக்குழுவை கூற வைத்திருப்பது ‘திருக்குவளை தீயசக்தி’யின் சதி. எனது அரசும், தொண்டர்களும் முடிந்தவரை விரைவாகத்தான் ஸ்டிக்கர்களை ஒட்டினர்கள்.
சென்னையை வெள்ளம் சூழ்ந்த நேரத்தில், பல்வேறு பத்திரிகைகளும், சமூக வலைத்தளங்களும் அதிமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டிய வேகத்தை மிகவும் பாராட்டி எழுதினர். இதை தாங்க முடியாத எதிர்கட்சிகளும் என் ஆட்சிக்கு களங்கம் கற்பிக்கும் நோக்குடன் மத்திய ஆய்வுக்குழுவை இம்மாதிரி அறிக்கை கொடுக்க செய்துள்ளனர் என்றார்.
There are no comments yet
Or use one of these social networks