வைகோ, விஜயகாந்த் ரகசிய சந்திப்பு – டெப்பாசிட்டை எப்படி தக்கவைப்பது என்பது குறித்து ஆலோசனை

1520

சென்னை: இன்று மக்கள் நலக்கூட்டணி தலைவரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோவும், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தும் ரகசியமாக சந்தித்து பேசியதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து ஒரு விஜயகாந்த் கட்சி தொண்டர் ஒருவர் கூறியதாவது: வரும் சட்டமன்ற தேர்தலை நினைத்து கேப்டன் கொஞ்சம் கலக்கதில்தான் இருக்கார். எந்தக்கூட்டணியில் சேர்ந்தாலும், எப்படியாச்சும் டெபாசிட்டையாவது தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் காய்களை நகர்த்தி வருகிறார்.

வைகோ முன்னேற்பாடாக கம்யூனிஸ்டுகளை வளைத்துப் போட்டு வரும் தேர்தலில் டெபாசிட்டை உறுதி செய்து இருக்கிறார். மேலும் பல தேர்தல்களை சந்தித்து டெபாசிட் இழந்த அனுபவமும் வைகோவிற்கு இருப்பதால் கேப்டன் வைகோவை சந்தித்து அந்த நுணுக்கங்களை கேட்டதாக தெரிகிறது. ஏற்கனவே தனக்கு டெபாசிட்டை உறுதி செய்ததாலும், மக்கள் நலக் கூட்டணியில் சேர்வதால் விஜயகாந்துக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்பதாலும் , வைகோவும் கேப்டனை கூட்டணியில் சேர வற்புறுத்தவில்லை என்று அவர் கூறினார்.

There are no comments yet