சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களுக்கான நேர்காணலை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள திரு.வி.க. நகர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த சென்னை மாவட்ட பாமக இளம் பெண்கள் தலைவர் வனிதாமணி மற்றும் எண்ணூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த மாநில மகளிரணி செயலாளர் சீதா ரமணி ஆகியோரிடம் நேர்காணல் நடத்தியபோது ‘உங்களுக்கு மரம் வெட்டத் தெரியுமா’ என கேட்டதாக செய்திகள் கூறுகின்றன.
இது குறித்து ஒரு மரம் வெட்டித் தொண்டர் கூறும்போது: தேர்தல் அருகில் வர வர தலைவருக்கு மரை கழண்டு போச்சின்னு நினைக்கிறேன். கட்சியின் அடிப்படை உறுப்பினர் ஆவதற்கு தகுதியே ‘மரம் வெட்டத் தெரிந்திருக்க வேண்டும்’ என்பதுதான், இப்போ வேட்பாளர் நேர்காணலில் போய் இந்தக் கேள்வியை கேட்கிறார். அதோட எங்க ‘மரம் வெட்டி பயிற்சிக் கல்லூரியில் மேற்கொண்டு பயிற்சி எடுத்த பிறகுதான் பாமக உறுப்பினர் அட்டையே கொடுக்கிறாங்க’ என்றார்.
அதன் பிறகு, நேர்காணல் தொடர்பாக டாக்டர் ராமதாஸ் பேசும்போது, “இந்த நேர்காணலை நிறைய மரம் வெட்டி அனுபவம் உடைய 5 குழுக்கள் நடத்துகின்றன. நேர்காணலில் தகுதி பெற்றவர்கள், அடுத்த கட்டமாக மரங்களை வெட்டியும் அவற்றை சாலைகளில் தடையாகப் போட்டும் எங்களுக்கு காண்பிக்க வேண்டும். விஞ்ஞானரீதியில் இந்த நேர்காணல் இருக்கும். எந்த நிலையிலும் தமிழகத்தின் வளரும் கட்சிகளான சீமானின் கட்சி மற்றும் மற்ற ஜாதிக் கட்சிகளுக்கு நாங்கள் வழிகாட்டியாக இருப்போம், திமுக, அதிமுக தவிர எந்தக் கட்சி வந்தாலும் எங்களுடைய கூட்டணியில் ஏற்றுக் கொள்வோம்” என்றார்.
There are no comments yet
Or use one of these social networks