மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ‘மியுசிகல் சேர்’ முறையில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை சுழல் முதல்வர்கள் – வைகோ தகவல்

1059

மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம், மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நடந்தது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:

மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளரை தேர்தலுக்கு முன்பாக அறிவிக்க மாட்டோம். தேர்தலுக்கு பிறகு ‘மியுசிகல் சேர்’ முறையில் முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்படுவர். தற்போதைய நிலையில் நான்கு கட்சிகள் மக்கள் நலக்கூட்டணியில் இருப்பதால் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ‘மியுசிகல் சேர்’ நிகழ்ச்சி நடக்கும். தேர்தலுக்கு பிறகு ஒருவேளை விஜயகாந்த் மற்றும் வாசன் கட்சிகள் எங்களுடன் இணைந்தால் ‘மியுசிகல் சேர்’ முறையில் அவர்களுக்கும் சம உரிமை கொடுக்கப்படும் என்றார்.vaiko walking

இது பற்றி ஒரு மதிமுக தொண்டர் கூறும்போது ‘எங்க தலைவர் ரெம்ப கில்லாடியான ஆளு, நடைப்பயணம் போய் வைகோவுக்கு ரெம்ப அனுபவம் இருப்பதால் ஒவ்வொரு முறையும் ‘மியுசிகல் சேரை’ அண்ணன் தான் பிடிப்பார், அப்புறம் என்ன எப்போவுமே நாங்கதான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர்’ என்று காமடி பண்ணினார்.

There are no comments yet