கெயில் விவகாரம்: மோடிக்கு ஜெயா எழுதிய கடிதம் திரும்பி வந்தது – தபால் தலைக்கு பதில் ‘அம்மா ஸ்டிக்கரை’ ஒட்டிய அதிகாரிகள்

396

சென்னை: ‘கெயில் நிறுவன எரிவாயு குழாய் பதிப்பில், சுமுக தீர்வு காண உதவ வேண்டும்’ என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம் திரும்பி வந்து விட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இது பற்றி மேலும் கூறப்படுவதாவது:

தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் கெயில் நிறுவன திட்டத்தை, விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதிய 1047-வது கடிதம் தலைமைச் செயலகதிற்கே திரும்பி வந்தது. இது பற்றிய விசாரணையில், தபால் தலைக்கு பதிலாக சில விசுவாசமான அதிகாரிகள் ‘அம்மா ஸ்டிக்கரை’ ஒட்டியதால் கடிதம் திரும்பி வந்ததாக தெரியவருகிறது.jaya

ஒரு அம்மாவின் அடிமை கூறும்போது ‘அம்மாவும் தன் தவ வாழ்க்கையை அர்ப்பணிச்சு தமிழ்நாட்டை எப்படியாவது முன்னேற்றி விட்டுடனும்னு அரும்பாடு படுறாங்க. ஆனா இந்த திமுக உள்ளிட்ட எதிரிகட்சிகளும் மோடியின் உதவாக்கரை கார்ப்பரேட் அரசாங்கமும் அதை கெடுத்து விட்டுடனும்னு கங்கணம் கட்டி அலையுதுங்கோ. காங்கிரசுடன் சேர்ந்து திமுக முதல் 3 வருஷம் அம்மாவை எந்த திட்டத்தையும் செய்ய விடல. சரி போகட்டும் அடுத்த ரெண்டு வருஷத்லயாவது எப்படியாவது நல்லது செய்யலாம்னு பார்த்தா, அதற்குள்ள கேசு, ஜெயிலு, கமிஷன்னு இந்த பிஜேபி புகுந்து கெடுத்துடுச்சி. என்ன தான் பண்ணுவாங்க அம்மாவும்’ என்று அங்கலாய்த்தார்.

There are no comments yet