ஸ்டாலினும், அழகிரியும் இரு கண்கள் – வலிக்கும் கண்ணை மறக்க ஓடி வந்து நிதி கொடுப்பாய் உடன்பிறப்பே – கருணாநிதி கெஞ்சல்

427

திமுக தலைவர் கருணாநிதி உடன்பிறப்புகளுக்கு இன்று எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது: 1953-ம் ஆண்டு கொம்பு நீளமாக உள்ள ஒரு கொடி ஆடு என் காரில் பாய்ந்ததால் பிரியாணி ஆனது. அந்த பிரியாணியை உண்ட மயக்கத்தில் நானும், வண்டியின் டிரைவரும் கண்ணயர்ந்து விட்டோம், அப்போது . நடந்த விபத்தில்தான் நான் என் கண்களை இழக்க நேர்ந்தது. இன்றுவரை அழகிரியும் ஸ்டாலினும் தான் எனது இரு கண்களாக இருந்து எனது சொத்தையும் கழகத்தையும் காப்பாற்றி வருகின்றனர்.

இந்த அழகிரி கண் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. அவ்வப்போது வலி சற்று குறைந்த போதிலும், வலி இன்னமும் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளது. ஏன், அந்த வலி இன்றளவும் என்னை வேதனைப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இந்த வலியை நான் மறக்க வேன்றுமென்றால் தாரளமாக குடும்ப நிதியும், கழக நிதியும் எனக்கு கொடுபதுதான். இதுவரை சேர்ந்த நிதியே இன்று வரை 26 கோடியே 84 இலட்சத்து 30 ஆயிரத்து 936 ரூபாய் என்பது எனக்குள்ள கண் வலியை மறக்கவே செய்கிறது, எனவே என் குடும்பத்திற்கு காசைக் கொடுத்து என் கண்ணைக் காப்பாற்று என்று கெஞ்சுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

There are no comments yet