சென்னை: கடந்த ஜனவரி மாதம் இலங்கை முல்லைத்தீவில் நடந்த உழவர் பெருவிழாவில் கலந்துகொண்டு கவிஞர் வைரமுத்து பேசியபோது ஈழ மகா காவியம் ஒன்றை எழுதி முடிப்பதை தன் வாழ்நாளின் பெரும் பணியாகக் கருதுவதாகவும், கடும் உழைப்பில் அதை தான் நிறைவு செய்யபோவதாகவும் கூறியிருந்தார். இன்று சென்னையில் அது பற்றி நிருபர்களிடம் உரையாடியபோது வைரமுத்து கூறியதாவது: நான் இலங்கை சென்றபோது, ஒரு உணர்ச்சிப் பெருக்கில் ஈழ மகா காவியம் எழுதுவேன் என்று சொல்லி விட்டேன். ஆனால் உங்களுக்குத்தான் தெரியுமே மெட்டு இல்லாமல் என்னால் பாட்டு எழுத முடியாது என்று. எனவே ஈழ மகா காவியம் எழுதுவது சிரமமான காரியம் என்றார்.
There are no comments yet
Or use one of these social networks