அலறி ஓடும் தலைவர்கள், வேட்பாளர் பற்றாக்குறை – பீகாரிலிருந்து ஆட்களை இறக்குமதி செய்ய காங்கிரஸ் முடிவு

391

சென்னை: வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட தமிழகத்தை சேர்ந்த எவரும் முன் வராததால் பீகாரிலிருந்து வேட்பாளர்களை கொண்டுவர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: இளங்கோவன் தமிழ் நாட்டின் அனைத்து தொகுதிகளிnagma
லும் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு ராகுல் காந்தியை முதல்வராக்குவேன் என்று அறிவித்ததை தொடர்ந்து தமிழகத்தில் எஞ்சி இருக்கும் காங்கிரஸ் தலைவர்களும், முன்னாள் எம்எல்ஏக்களும் எங்கே தலைமை நம்மளை தேர்தலில் நிற்க சொல்லி விடுமோ என்று ‘கிலி’ பிடித்து உள்ளனர். ஒருசிலர் ஊரை காலி செய்தும், பலர் தங்களது மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்தும் உள்ளனர்.

இதனால் வெறுத்துப் போன தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், தன் ஆதரவாளர்களுடன் சத்தியமூர்த்தி பவனில் இன்று ஆலோசனை செய்து தமிழக தேர்தலில் போட்டியிட பீகார் மாநிலத்தில் இருந்து ஆட்களை வரவழைப்பது என்று முடிவு செய்துள்ளார். அவர்களின் பொழுதுபோக்கிற்கு குஷ்பு, நக்மா தலைமையில் கலை நிகழ்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

There are no comments yet