திமுக-விற்கு மோட்சம் கொடுக்கவே வந்தேன் – ஸ்டாலினை சந்தித்த பின் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பேட்டி

319

சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நேற்று சந்தித்துப் பேசினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டுக்கு சென்ற அவரை வாசலில் வந்து பொன்னாடை போர்த்தி வரவேற்றார் ஸ்டாலின். பின்னர் அவர்கள் சுமார் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர். இந்த சந்திப்புக் குறித்து செய்தியாளர்களிடம் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறியதாவது: “வரும் தேர்தல் திமுக-விற்கு ஒரு அக்னி பரீட்சை. தேர்தலுக்கு பிறகு திமுக-விற்கு மோட்சம் கொடுப்பது பற்றி ஸ்டாலினுடன் ஆலோசனை செய்தேன். கலைஞர் ராமானுஜர் தொடர் எழுதி என்னைப் போன்றவர்களின் அன்புக்கு பாத்திரமாகிவிட்டார். அதனால் நானும், மற்ற ‘பிசினஸ்’ சாமியார்களும் வரும் தமிழ் நாடு தேர்தலில் திமுக-விற்காக பிரச்சாரத்தில் ஈடுபடலாம் என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு, திமுகவிற்கு மோட்சம் கொடுப்பதற்கு தேர்தல் முடிவுவரை காத்திருக்கத் தேவையில்லை” என்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறினார்.

There are no comments yet