சென்னை: சமூக நீதி காவலர் கருணாநிதி கூட்டணிக் கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு முறையில் சீட்டுகள் கொடுக்கப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் தனியார் துறையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். இதற்கு முன் மாதிரியாக, மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் கட்சிகளுக்கும் உரிய சதவீதப்படி சீட்டுகள் கொடுக்க திமுக முடிவு செய்துள்ளது.

இதன்படி, சமூக நீதி போற்ற, பிற்படுத்தப்பட்ட கட்சிகளுக்கு 50 விழுக்காடும், மிகப் பிற்படுத்தப்பட்ட கட்சிகளுக்கு 20 விழுக்காடும்; பழங்குடியினர், சிறுபான்மையினரான இஸ்லாமியர் கட்சிகள், தாழ்த்தப்பட்டோர் நடத்தும் கட்சிகளுக்கு தலா 10 விழுக்காடும் சீட்டுகள் ஒதுக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக ஏதேனும் சீட்டுகள் மிச்சம் இருந்தால் திமுக அந்த இடங்களில் போட்டியிடும், இல்லையெனில் சமூக நீதிக்காக வரும் தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளது” இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
கருணாநிதியின் இந்த அறிவிப்பைக் கேட்டு பல்வேறு ஜாதிக் கட்சிகளும், மதக் கட்சிகளும் குஷியில் உள்ளதாக நமது கப்ஸா நிருபர் தெரிவிக்கிறார்.
There are no comments yet
Or use one of these social networks