(திமுக-விற்கு) சங்கை யார் ஊதினால் என்ன – காங்கிரஸ் கூட்டணி குறித்து அழகிரி கருத்து

878

மதுரை: சட்டசபை தேர்தலுக்கு 2 மாதத்திற்கு முன்பாக தனது முடிவை அறிவிப்பேன் என்று கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் முக. அழகிரி, காங்கிரஸ், திமுக கூட்டணி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு “சங்கை யார் ஊதினால் என்ன” என்று பதிலளித்தார்.

திமுகவில் மீண்டும் இணைவதற்கு இலவு காத்த கிளியாக காத்திருக்கும் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி காங்கிரஸ் கூட்டணி குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது “செத்தப்ப அழாதவன் நாலாவது வருஷ தெவசத்துக்கு கதறிக் கதறி அழுதானாம், (திமுக-விற்கு) சங்கை யார் ஊதினால் என்ன. காங்கிரஸ் கூட்டணி திமுகவின் தோல்வியை எந்த விதத்திலும் பாதிக்காது. வேண்டுமானால் அதிக தொகுதிகளில் டெபாசிட் இழப்பதற்கு உதவும். இன்னும் இரண்டு மாதங்களில் தலைவர் எனக்கு நல்ல சேதி சொல்லுவார். தயவு செய்து நான் சொல்றதை போடுங்க, நீங்களா எதையாவது எழுதி, என் ‘போஸ்டர் பாய்ஸ்’ மாதிரி என்னை வம்புல மாட்டி விட்டுடாதீங்க’ என்று அழகிரி கோபத்துடன் கூறினார்

There are no comments yet