சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரம் இல்லத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசி திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனால் “ராகுல் காந்தி தான் எங்கள் முதல்வர் வேட்பாளர். தமிழக முதல்வர் நாற்காலியில் ராகுல் அமரவேண்டும் என்பதே எங்கள் ஆசை” என்று கூறிய இளங்கோவனின் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட காங்கிரஸ் மேலிடம் மீது கோபமாக இருக்கும் இளங்கோவன் மற்றும் குஷ்புவின் ஆதரவாளர்கள் எப்படியாவது ராகுல் காந்திக்கு துணை முதல்வர் பதவியை திமுகவிடமிருந்து பெறுவதற்கு முனைப்புடன் இருப்பதாகத் தெரிகிறது.
இது குறித்து ‘கோஷ்டி’ குறிப்பிட விரும்பாத வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு தற்காலிக காங்கிரஸ் தொண்டர் கூறியபோது, எப்படியாச்சும் ராகுல்ஜியை முதல்வராக்கி வேண்டும் என்று ஈவிகேஎஸ் சார் ரெம்ப ஆவலா இருந்தார், இப்ப திமுகவோட கூட்டணி அமைஞ்சதாலே, எப்படியாவது துணை முதல்வர் பதவியை ராகுல்ஜிக்கு வாங்க கருணாநிதியிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனா என்ன பண்றது அந்த சபரீசன் மனசு வெக்கணுமே’ என்று ‘வாங்கிய காசுக்கு’ வக்காலத்து வாங்கினார்.
There are no comments yet
Or use one of these social networks