தானியங்கி விற்பனை எந்திரங்கள் மூலம் ‘அம்மா குவார்ட்டர்’ – குடிமக்களை கவர ஜெயாவின் தேர்தல் திட்டம்

335
jaya tasmac
கேலிச்சித்திரம் நன்றி: கார்டூனிஸ்ட் பாலா

சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி, பல்வேறு நலத்திட்டங்களை அவசர அவசரமாக செயல்படுத்தி வரும் முதல்வர் ஜெயலலிதா குடிமகன்களை குஷிப்படுத்தவும் புதுமைத் திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிகிறது. இதன் முதல் கட்டமாக ஒவ்வெரு வாக்குச் சாவடிக்கும் டாஸ்மாக் சார்பில் தானியங்கி ‘சரக்கு’ விற்பனை எந்திரங்கள் நிறுவப்பட உள்ளதாக போயஸ் கார்டனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மேலும் கூறப்படுவதாவது: கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து கட்சியினரும் ஒற்றுமையாக இருந்து டாஸ்மாக்குக்கு ஆதரவு கொடுப்பது அனைவரும் அறிந்ததே. இதனால் தேர்தல் நேரத்தில் மாற்றுக் கட்சியினரை அதிமுகவிற்கு இழுக்க முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ‘தானியங்கி மது விற்பனை எந்திரங்கள்’ (automatic vending machines) மூலம் மது விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதன்படி சுமார் 200 கோடி செலவில் தானியங்கி மது விற்பனை எந்திரங்கள் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளன. இதன் முதல் விற்பனையை எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த தொடக்கி வைக்கிறார்.

அம்மா வாட்டர் நன்கு பிரபலம் அடைந்ததால், இத்திட்டத்திற்கு ‘அம்மா குவார்ட்டர்’ என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

There are no comments yet