சென்னை: இன்று திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி டுவிட்டரில் வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையில் தன் குடும்பத்தை புறக்கணிக்குமாறு கூறியிள்ளார். இதன் விபரம்:
கேள்வி: உங்கள் மகன் அழகிரி, திமுக-காங்கிரஸ் கூட்டணியை ‘பொருந்தாக் கூட்டணி’ என்று கூறியிருக்கிறாரே?
பதில்: எனது குடும்பத்திலேயே அழகிரி ஒருவர்தான் எப்போதாவது உண்மை பேசக் கூடியவர். இதற்க்கு நான் என்ன சொல்ல முடியும். நானே ரெம்ப கஷ்டப்பட்டு ரெண்டு முட்டாள ஒண்ணு சேர்த்து வெச்சிருக்கேன். அழகிரி கொஞ்சம் தெரிஞ்சிட்டு வந்து இந்த கூட்டணிய கலைக்கலாம்னு நினைக்கிறார். ஆனால் ஒன்று எனக்கு ‘நடையாய் நடந்து குட்டு வாங்கும் மகனும் உண்டு, இந்த மாதிரி ‘குண்டக்க மண்டக்க’ அறிக்கை விட்டு பெயர் வாங்கும் மகனும் உண்டு ‘.

கேள்வி: இந்த தேர்தலில் உடன்பிறப்புக்களுக்கும், பொது மக்களுக்கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்: நான் என்ன சொல்வது, அதைத்தான் என் மூத்த மகன் சொல்லிவிட்டாரே. ‘அலட்சியப்படுத்துங்கள்’ – என்னை, என் கோமாளிக் குடும்பத்தின் சொத்துச் சண்டையை. ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அப்பன் மகனுக்கும், அண்ணன் தம்பிக்கும் ஆயிரம் இருக்கும், நாங்கெல்லாம் ஒரு ரத்தம், உடன்பிறப்புகளும், பொது மக்களும் தயவு செய்து எங்களை ‘அலட்சியப்படுத்துங்கள்’.
There are no comments yet
Or use one of these social networks