வெள்ள நேரங்களில் தன்னை தேடாதிருக்க ‘கூகுளுக்கு’ கமல் ஹாசன் நேரில் கோரிக்கை

328

பாஸ்டன், அமெரிக்கா: சமீபத்தில் அமெரிக்கா சென்ற நடிகர் கமல் ஹாசன் பாஸ்டன் நகரில் உள்ள கூகுள் (Google) அலுவலகத்திற்கு நேரில் சென்று அங்குள்ள தொழில்நுட்ப அதிகாரிகளை சந்தித்தார். இது குறித்து கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, பொதுமக்களும், எனது ரசிகர்களும், என்னைத் தேடியதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். மேலும் பலர் என்னை கூகுளில் தேடி, நான் ஜன்னலோரம் அமர்ந்து மழையையும் இயற்கையையும் ரசித்துக் கொண்டிருந்தபோது, எனக்கு ஈமெயில் அனுப்பி என்னை தொந்திரவு செய்தனர். அதனால் நானே இன்று அமெரிக்காவில் உள்ள கூகுல் அலுவலத்திற்கே சென்று இந்த மாதிரி பேரிடர் காலங்களில் என்னை மக்கள் தேடாதிருக்குமாறு அங்குள்ள அதிகாரிகளிடம் ‘(சுந்தர்) பிச்சை’ கேட்டேன். அவர்களும் அடுத்த மழை வரும்போது அதை ‘டெஸ்டிங்’ செய்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

There are no comments yet