சென்னை: தேமுதிக சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் நேர்காணல் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வரும் 22-ம் தேதி முதல் மார்ச் 1 வரை நடக்கவுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதனால் கலக்கமடைந்துள்ள கட்சியினர், விஜயகாந்தை சந்திக்க செல்லும்போது தலைக்கவசம் அணிய முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஒரு கட்சித் தொண்டர் கூறும்போது, கேப்டனின் மூடு எப்போ நல்லாருக்கும், எப்போ மாறும்னு யாராலும் சொல்ல முடியாது. அண்ணனுக்கு கோவம் வந்தா பக்கத்திலே இருக்கவங்களுக்கு என்ன நடக்கும்னு அந்த பிரேம லதாவுக்கே வெளிச்சம். அதனால ஒரு பாதுகாப்புக்கு ஹெல்மெட் போட்டுட்டு அண்ணனை சந்திக்கலாம்னு இருக்கோம் என்று தெரிவித்தார்.
There are no comments yet
Or use one of these social networks