இளங்கோவன் விரும்பினால் எந்தத் தொகுதியிலும் குத்தாட்டம் போடத் தயார் – நக்மா அதிரடி அறிவிப்பு

687
சென்னை: காங்கிரஸ் கட்சியில் கடந்த ஆண்டு இணைந்த நடிகை நக்மாவுக்கு கடந்த வாரம் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. மேலும் நக்மா தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்துக்கு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
 
காமராஜர், கக்கன் போன்ற தலைசிறந்த தலைவர்கள் தமிழக காங்கிரசில் இருந்து மக்கள் பணியாற்றி உள்ளார்கள், இப்போது நானும், குஷ்புவும்  காப்பாற்ற வேண்டிய நிலையில் காங்கிரஸ் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதே எனக்கும், குஷ்புவுக்கும் ஒரே குறிக்கோள். அதற்காகவே பணியாற்றி வருகிறோம்.nagma கட்சியை முன்னேற்றுவது, வலுப்படுத்துவது குறித்து எப்படி எங்கள் ‘திறமை’களை பயன்படுத்துவது குறித்து எங்களுக்குள் பேசி வருகிறோம். காங்கிரஸ் கட்சியின் தலைமை அனுமதித்தால், தமிழகத்தில் எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் நான் குத்தாட்டம் போடுவேன்,  இந்த விஷயத்தில் எனக்குத் துணையாக குஷ்பு இருப்பார். அதே நேரம், திமுக விரும்பினால் வருகின்ற தேர்தலில் அவர்களுக்காகவும் குத்தாட்டம் போடத் தயார்” என்றும் அதிரடியாக பேட்டியளித்தார்.
 
நக்மாவின் இந்த அதிரடி முடிவினால் காங்கிரசாரும், திமுகவினரும் குஷியில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

There are no comments yet