ஜெயலலிதாவின் அவதூறு வழக்குகளை சமாளிக்க டிராபிக் ராமசாமியுடன் கூட்டணி – விஜயகாந்த் முடிவு

224

சென்னை: விஜயகாந்த் கட்சியை தங்கள் பக்கம் இழுக்க திமுக, பாஜக உள்ளிட்ட ஒவ்வொரு கட்சிகளும் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. இந்த நிலையில் தன் மீது எண்ணற்ற அவதூறு வழக்குகளை அள்ளி வீசும் ஜெயலலிதாவை வஞ்சம் தீர்க்க, ஜெயலலிதா மீது வழக்கு மேல் வழக்குப் போடும் டிராபிக் ராமசாமியுடன் கூட்டணி வைக்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது பற்றிய முதல் கட்ட பேச்சு வார்த்தை நடத்த டிராபிக் ராமசாமி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், விஜயகாந்தை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிராபிக் ராமசாமி கூறியதாவது: விரைவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் என்னுடன்தான் கூட்டணி வைக்க வேண்டும் என்று விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. தமிழ் நாட்டில் எந்தத் தொகுதியிலும் தனியாக அவர் மட்டும் போட்டியிட்டால் அவருக்கு வெற்றி உறுதி, விஜயகாந்திற்கு எனது முழு ஆதரவு உண்டு’ என அவர் தெரிவித்தார்.

There are no comments yet