234 தொகுதிகளிலும் தனித்து தானே போட்டி – “நான் கறிவேப்பிலை அல்ல ஊறுகாய்” சரத்குமார் அதிரடி

316

நாகர்கோவில்: சமத்துவ மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நாகர்கோவிலில் நடைபெற்றது. கூட்டத்தில் சரத்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுகவை கூட்டணியில் இருந்து விலக்கி விட்டோம். அதிமுக என்னை கறிவேப்பிலை போன்று பயன்படுத்திக் கொண்டது. இனிமேல் என்னை ஊறுகாயாக பயன்படுத்தும் கட்சியுடன் மட்டும் தான் கூட்டணி. சமத்துவ மக்கள் கட்சிக்கென்று கொள்கைகள் கோட்பாடுகள் உண்டு, அவை மகளிர் அணித் தலைவி ராதிகாவிற்கே வெளிச்சம். சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து யாரிடமிருந்தும் அழைப்பு வரவில்லை, எனவே 234 தொகுதிகளிலும் தனித்து தானே போட்டியிட்டு ஜெயலலிதாவிற்கு வெற்றி தேடித் தருவேன் என்றார்.

There are no comments yet