மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ‘அம்மா’ படத்துடன் ‘ஸ்டிக்கர்’ பொட்டு இலவசம் – அதிமுக தேர்தல் வாக்குறுதி

745

சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் அதிமுக, தனது இலவசங்கள் பட்டியலில் ஸ்டிக்கர் பொட்டுகளும் இடம் பெற வகை செய்துள்ளது. இது குறித்து போயஸ் கார்டன் வட்டாரங்கள் கூறியதாவது: தற்போது தமிழகத்தில் ‘ஸ்டிக்கர்’ மிகவும் பிரபலமடைந்து இருப்பதால் அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழகத்தின் அனைத்து பெண்களுக்கும் அம்மா படத்துடன் ஸ்டிக்கர் பொட்டுகள் இலவசமாக  வழங்க இருக்கிறது. இதையல்லாமல் கோவில்களிலும் குங்குமத்திற்கு பதிலாக ‘அம்மா ஸ்டிக்கர் பொட்டுக்களை அர்ச்சகர்கள் விநியோகம் செய்யவும் உத்திரவிடப்படும். ஸ்டிக்கர் பொட்டுவுடன் வேறு என்ன புதுமையான இலவசம் கொடுக்கலாம் என்று அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் ‘ஹோட்டலில் ரூம் போட்டு’ யோசித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

There are no comments yet