மூன்று முறை திருமணம் செய்து பெண்களுக்கு சம உரிமை கொடுத்தேன் – ஜெவின் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு கருணாநிதி பதிலடி

418

சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்த வகை செய்யும் மசோதா சட்டசபையில் நிறைவேறியது. இது குறித்து திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தனது கேள்வி பதில் அறிக்கையில் கூறியதாவது: நான் இதுவரை மூன்று முறை திருமணம் செய்து பெண்களுக்கு 50 சதவீத சம உரிமை கொடுத்துள்ளேன். பெண்களுக்காக திமுகவும், நானும் எவ்வளவு கடுமையாக உழைத்துள்ளோம் என்பது, நான் தள்ளாத வயதிலும், வெட்கத்தையும், மானத்தையும் விட்டு ஜெயிலில் இருந்த என் மகள் கனிமொழியைப் பார்க்க எத்தனை முறை டெல்லி சென்றேன் என்பதைப் பார்த்தாலே தெரியும். மேலும் கட்சியிலும் மகள் கனிமொழிக்கு சம உரிமை கொடுக்க முயன்று வருகிறேன். ஆகவே ஒரு மனைவியும் மகனுக்கும், இன்னொரு மனைவியின் மகளுக்கும் கட்சியை சமமாக பங்கிட்டுள்ளேன். ஆகவே ஜெயலலிதாவின் இட ஒதுக்கீடு மசோதா “பூ” கேட்கும் மகளிர்க்கு “காகிதப் பூ” என்று கூறியுள்ளார்.

வழக்கம் போல் இதற்கு பதில் கருத்து கூறிய திமுக உடன்பிறப்பு ‘தலைவருக்கு, குஷ்பூன்ன ரெம்ப பிடிக்கும், அதான் பூ, காகிதப் பூ என்று சொல்லி நம்ம காதுல பூ சுத்தறார்’ என்று கூறி கலாய்த்தார்.

There are no comments yet