சென்னை: நேற்று நடந்த திமுக வேட்பாளர் நேர்காணலில், ஸ்டாலின் பங்கேற்கவில்லை. கருணாநிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்பை தொடர்ந்தே, அவர், ‘ஆப்சென்ட்’ ஆனதாக கூறப்பட்டாலும், தன் குடும்பத்தினருக்கு நெருங்கியவர்களுக்கு சீட் கொடுக்க மாட்டேன் என்று கருணாநிதி சொல்லியதால் மனம் உடைந்த ஸ்டாலின் இமயமலை சென்று 2-G சாமியார்களிடம் ஆசி வாங்கி வந்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின் “அவர் சொல்வதை நான் கேட்க மாட்டேன் என் இஷ்டப்படி தான் நடப்பேன் – அவரும் நான் சொல்வதை கேட்க மாட்டார் அவர் இஷ்டப்படி தான் நடக்க வேண்டும் என்பார் – இவ்வளவுதான் – இதென்ன ஒரு மோதலா, இதைப்போய் ஊடகங்கள் பெரிதாக்குகின்றன” என்று கூறினார்.
இது குறித்து திமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ”சனித் தொல்லையால், ஸ்டாலின் அவதிப்படுகிறார். அதனால் தான், நேர்காணலுக்கு வரவில்லை. அவர் முதல்வராக அந்த சனி பகவான்தான் உதவி செய்ய வேண்டும். அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா” என்று கவுண்டமணி ஸ்டைலில் கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks