கூட்டணிக்கு வரும் வரை விஜயகாந்த் வீட்டு வாசலில் உண்ணாவிரதம் – கலைஞரின் கடைசி போராட்டம்

714

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு தேர்தல் களத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கூட்டணியில் விஜயகாந்தை சேர்த்துக் கொண்டால் மட்டுமே டெபாசிட் வாங்க முடியும் என்று கருணாநிதி நம்புவதாக கோபாலபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே எப்படியாவது விஜயகாந்தை தி.மு.க. கூட்டணியில் சேர்த்து விட பல வழிகளிலும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் கடைசி கட்டமாக வியஜகாந்த் வீட்டு வாசலில் உண்ணாவிரதம் இருக்கவும் கலைஞர் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஒரு திமுக தொண்டர் கூறும்போது ” தலைவர் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி சென்னை கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்த மாதிரி, தடாலடியா எதாச்சும் செஞ்சு கேப்டனை உள்ள கொண்டு வந்துடுவார். போற போக்க பாத்த ‘கிங்’ ஆகணும் நினைக்கிற விஜயகாந்த் ‘கிங்கரர்’ ஆயிடுவார் போலிருக்கு” என்றார்.

There are no comments yet