சென்னை: இந்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான வரவேற்பு மற்றும் அறிவிக்கப்படாத திட்டங்களுக்கான வருத்தம் குறித்து விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: இந்த இரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் பெரிதும் எதிர்பார்த்திருந்த திட்டங்கள் குறித்த அறிவிப்பு இல்லை என்பது வருத்தமளிக்கிறது. டெல்லியிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பறக்கும் ரயில் விடவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை, இந்த திட்டம் இந்த பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெறாதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த நிலையை காணும்போது “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்கின்ற கருத்து தமிழகத்தில் மீண்டும் வலுப்பெறும் நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது, இது “பழைய மொந்தையில் புதிய கள்”, ரயில் நிலையங்களில் டாஸ்மாக் கடைகள் வைக்கவும் தமிழக அரசோடு இணைந்து மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்
There are no comments yet
Or use one of these social networks