‘ஊழல் தாத்தா, தேர்தல்ல தோத்தா’ – கருணாநிதி பற்றி கவியரசு உதயநிதி ஸ்டாலின் எழுதிய டுவிட்டர் கவிதை

1070

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவிற்கு வஞ்ச புகழ்ச்சியில் பிறந்த நாள் கவிதை எழுதி, தன்னை கவிஞராக அறிமுகப்படுத்தி கொண்டுள்ள ஸ்டாலின் மகன் உதயநிதியின் கொலை வெறி, மன்னிக்கவும், கலை வெறி அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ‘உலகம் கண்ட ஊழல் தாத்தா, நீ தேர்தல்ல தோத்தா’ என்ற தலைப்பில் 93-வயது முதல்வர் வேட்பாளரும், தன் தாத்தாவுமான கருணாநிதி குறித்தும், திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்தும் அன்பான விமர்சனம் செய்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியை தொடர்ந்து, அவரது குடும்பத்தில், மகள் கனிமொழி கவிஞராக உள்ளார். இந்நிலையில் திமுகவின் அடுத்த வாரிசு கவிஞராக, உதயநிதி தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.

அந்த கவிதையை தி.மு.க.,வினருக்கு பரப்பும் நடவடிக்கைகளில், உதயநிதி ஆதரவாளர்கள் இறங்கியுள்ளனர். உதயநிதி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவிதை:

ஊழல் தாத்தா, தேர்தல்ல தோத்தா 

உலக மகா ஊழல் கில்லாடியே – திருட்டு ரயில் ஏறிவந்த இன்றைய சீமானே, குடும்பத்தை கோலோச்ச செய்ய இன்றும் – என்றும் துடிக்கும் கதாசிரியரே …பகுத்தறிவு மறைந்து பக்தி முற்றி திரியும் குடும்பமே … எமது வளங்களை கூறு போட்டு கொடுத்து – கொழுத்த மஞ்சள் துண்டே – உன் முகம் சிரிக்கிறது என்றால் – அது பதவிக்கும் – பணத்துக்கும் தானே தானை தலைவரே, ஒரு தொழிலும் பார்க்காமல் கொள்ளையடித்ததில் கோடிகளை போட்டு படம் எடுக்கும் நடிக்கும் பச்சிளம் பாலகன்களின் பகலவனே, குத்தாட்டம் தினம் பார்த்து – கடைவாயில் ஜொள்ளை காட்டி மக்களுக்கு ” நமக்கு நாமே ” நாமம் போடும் கூட்டமே, உண்ணாவிரத நாடகம் போட்டு ஈழ தமிழன் வெந்து சாம்பலாக கூலியாக பதவிகளை பெற்ற கொடூர குணவானே, தமிழனை கொன்ற கூட்டம் மீண்டும் ஆட்சி செய்ய அலைந்து வருவதற்கு ஆப்பு அடித்து மீண்டும் நல்லாட்சி தொடர வயதான அப்பனுக்கும் அமைதியை கொடுக்க போகும் எமது அருமை தமிழினிமே, வாழ்க நீ பல்லாண்டு … கடைசியாக இனி ஓய்வில் ஓய போகிறவர்வர்களின் செயல் பற்றி ” பேசி பழகிய பொய்யும் வாங்கி பழகிய கையும் போட்டு பழகிய பையும் கூடி கும்மாளம் அடித்த குடும்பமும் ” என்பதை நினைவில் கொண்டு – அவர்களுக்கு நிரந்தர ஓய்வு கொடுத்து நலம் – பல காண்பாய் தமிழினமே ஏனென்றால் பதவிக்கு அலையும் பச்சோந்திகள் ஓய்வுஎடுக்க மனம் வராது நாம் தான் கொடுத்து அவர்களின் பால் அக்கறை காட்ட வேண்டும்” (கவிதை நன்றி: செல்வராஜன் சிங்காரம், கடலூர் )udaynidhi

கவிதை குறித்து திமுக உடன்பிறப்புகள் கூறும்போது “அருமை, அருமை கவியரசு கண்ணதாசன் இவரிடம் தோற்றுவிடுவார், ஆரிய வாலி இவரிடம் கவிதை பயில்வார். எங்கள் தலைவர் கலைஞர் வீடு கட்டுத்தறியும் கவிதை பாடும்’ என்று பாராட்டு தெரிவித்தனர்.

There are no comments yet