சென்னை: சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு வரை காத்திருக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழ் இம்சை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் இம்சை, சட்டசபை தேர்தலை நினைத்தாலே எங்களுக்கு குளிர் ஜுரம் வந்துவிடுகிறது. யாருடனாவது கூட்டணி வைக்கலாம் என்றால் எங்களை யாரும் சீந்த மாட்டேன் என்கிறார்கள். எனவே கட்சியின் பாதுகாப்புக் கருதி தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவிற்குப் பின்னர் எங்களது வேட்பாளர் தேர்வு நடைபெறும். சில சமயங்களில் தேர்தல் முடிந்த பிறகு கூட்டணி வைப்பது போல், நாங்கள் தேர்தல் முடிந்த பிறகுதான் விருப்ப மனு பெறலாம் என்று நினைக்கிறோம் என்றார்.
There are no comments yet
Or use one of these social networks