டெனால்டு டிரம்ப்க்கு விட்டுக் கொடுத்தேன். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை – நாட்டு ஆமை சரத்குமார்

561

நாகர்கோவில்: நாட்டு ஆமை சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கூட்டம் முளகுமூட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் நிறுவன தலைவர் சரத்குமார் பேசினார். அவர் கூறியதாவது: நான் முதல்–அமைச்சர் ஆக வேண்டும் என்று தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. எனது நீண்டகால நண்பர் டெனால்டு டிரம்ப் கேட்டுக் கொண்டதற்காக இம்முறை விட்டுக் கொடுத்துள்ளேன். டுடோரியல் கல்லூரிகளில் முதல்வர் பதவி என்று வைத்துள்ளார்கள், ஆனால் பிரதமர் பதவி என்று எந்தக் கல்லூரியிலும் இருக்கிறதாக தெரியவில்லை. எனக்கு முதல்வர் ஆக வேண்டும் என்று கனவு கிடையாது. பிரதமராக வேண்டும் என்பதே எனது லட்சியம். விரைவில் டுடோரியல் கல்லூரிகளில் பிரதமர் பதவியை உருவாக்கி எனது லட்சியத்தை அடைவேன். இன்னும் பல இடங்களுக்கு தீர்ப்பு சொல்ல போகணும், இப்போதைக்கு இவ்வளவுதான் என்று கூறி செம்போடு புறப்பட்டார் நாட்டு ஆமை.

There are no comments yet