கார்த்தி சிதம்பரம் இப்போதுதான் காங்கிரஸ் தலைவருக்கு உரிய எல்லா தகுதியும் அடைந்தவர் – ராகுல் காந்தி

314

புது டெல்லி: ‘ஏர்செல் – மேக்சிஸ்’ ஒப்பந்தம் தொடர்பான வழக்கை அமலாக்க பிரிவும், வருமான வரித்துறையும் விசாரிக்கின்றன. இந்த விசாரணையில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சுவிட்சர்லாந்து உட்பட 14 நாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக ஆங்கில பத்திரிகையான ‘தி பயோனீர்’ செய்தி வெளியிட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் துணைத் தலைவர்  ராகுல் காந்தி கூறியதாவது: கார்த்தி சிதம்பரமும், அவரின் தந்தையும் நம் நாட்டிற்கு ஆற்றிய தொண்டுகள் அளவிட முடியாதவை. ப.சிதம்பரம் இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்து கொண்டு, பாகிஸ்தானிய வெளியுறவுkarthi chidambaram அமைச்சர் போன்று செயல்பட்டார். பாகிஸ்தானிய தீவிரவாதிகளை நல்லவர்களாக ஜோடித்தார். சிபிஐ யை கொண்டு, எதிர்த்தவர்களின் வீட்டில், ரைடு நடத்தினார். ‘பசி’க்கு பிறந்த பூனையும் பசிக்காக பாலை ருசித்துள்ளது. கார்த்திக்கு இப்போதுதான் முழு காங்கிரஸ் தலைவராகும் தகுதி வந்துள்ளது. அவர் மென் மேலும் பல ஊழல்கள் செய்து தேசிய அளவில் பெரிய காங்கிரஸ் தலைவராக என் வாழ்த்துக்கள் என்றார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறும்போது “சிதம்பரம் ஒரு ஏழை விவசாயி. அவர் பிள்ளை கார்த்தி சிதம்பரம் சிறு தொழில் செய்பவர். அவர்களை மன்னித்து விடுங்கள். மான்யம் எதாவது கொடுத்தால் பெட்டி கடை வைத்து பிழைத்து கொள்வார்கள்” என்று மவுனம் கலைத்தார்.

There are no comments yet