“அடிமைகளின் அம்மா திமுக” – ஜெயாவிற்கு செக் வைக்க ஓ.பன்னீர்செல்வம் புதுக் கட்சி தொடங்கினார்

1020

சென்னை: தமிழக அமைச்சரவையில் இருந்து சில அமைச்சர்கள் நீக்கப்பட்ட நிலையில் ரகசிய ஆலோசனை நடத்தி புதுக் கட்சி தொடங்கப் போவதாக நிதியமைச்சர் ஒ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரிவித்தனர். ”பொறுத்தது போதும், பொங்கி எழு தலைவா… குனிந்தது போதும்… நிமிர்ந்திடு தலைவா… தமிழகம் திரும்பும் உன்னை நோக்கி” என்று பச்சப்புள்ள பன்னீர் செல்வத்தை உசுப்பேற்ற அவரது ஆதரவாளர்கள் அடித்த போஸ்டர்களால் உணர்ச்சிவசப்பட்ட ஒ.பி.எஸ். தனக்கு நெருக்கமான 10 அமைச்சர்களுடன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் திடீர் ஆலோசனை நடத்தி, தான் ஆரம்பிக்கப் போகும் புதுக்கட்சிக்கு “அடிமைகளின் அம்மா திமுக” என்று பெயரிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதுக் கட்சி குறித்து ஒரு அடிமை திமுக தொண்டர் கூறும்போது “ஒடம்புக்குள்ள பேயே குடி வந்தாலும் குனிஞ்சு கும்புடு போட்டு அம்மா நாமம் வாழ்கனு தான் சொல்வாரு, அவரா தனிக்கட்சி ஆரம்பிக்க போறாரு” என்று கூறி உண்மையை உடைத்தார்.

There are no comments yet