சென்னை: சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த் வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கூறும்போது “நான் இதுவரைக்கும் தனியாகத்தான் இருக்கிறேன். கூட்டணி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் தெளிவாக இருக்கும்போது என் தொண்டர்களையும், பத்திரிகை நண்பர்களையும் அழைத்து கூட்டணி பற்றி சொல்வேன். எதைச்சொன்னாலும் உங்களை அழைத்து, உங்கள் முன்னால்தான் சொல்வேன் என்பதை இந்த நேரத்தில் உங்கள் முன்னால் சொல்கிறேன்” என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்த தமிழ் நாட்டிலுள்ள அனைத்து பத்திரிகையாளர்கள், டிவி செய்தியாளர்கள், சமூக வலைத் தளங்களில் கருத்து சொல்லும் ‘அறிவு ஜீவி’கள், தங்களுக்கு விஜயகாந்தை வைத்து நன்றாக பிழைப்பு நடப்பதாகவும், தமிழ் ‘மா’க்களை நல்லபடியாக எண்டர்டைன்மெண்ட் செய்ய விஜயகாந்த் மற்றும் அவரின் கூட்டணி குறித்து நாளுக்கு நாள் பரபரப்பாகவும், கற்பனை கதைகளைவிட சுவாரஸ்யமாக எழுதியும் தமிழ் தொண்டு ஆற்றி வருவதாகவும் தெரிவித்தனர். ‘கேப்டன் ஒன்றும் அவசரம் இல்லை, நீங்க கூட்டணி அறிவித்துவிட்டால் அப்புறம் எங்களுக்கு, கதை எழுதுவதற்கு வேறு நல்ல விஷயம் கிடைப்பது கஷ்டம், எனவே தேர்தலுக்கு அப்புறம் கூட கூட்டணி பற்றி அறிவிப்பு செய்யுங்கள்’ என்று விஜயகாந்தை கேட்டுக் கொண்டதாக நமது கப்ஸா நிருபர் தெரிவிக்கிறார்
There are no comments yet
Or use one of these social networks