மதுரா : உ.பி., மாநிலம், மதுராவிலுள்ள விருந்தாவனில் நடந்த பா.ஜ., இளைஞரணிக் கூட்டத்தில் பேசிய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது: 50 வயதினை நெருங்கும் அரசியல் தலைவர் ஒருவர், தன்னை இளைஞராக கருதி, கட்சியின் இளைஞரணி தலைவராக வலம் வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பார்லி உறுப்பினராக பதவி வகித்துவரும் அவரால் அவரது தொகுதிக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. தனது தாயின் ஆசியின் காரணமாகவே அவர் நீடித்து வருகிறார். இவ்வாறு ஸ்மிருதி இரானி, காங்., துணைதலைவரும், அக்கட்சியின் இளைஞரணி தலைவருமான ராகுலை தாக்கி பேசியுள்ளார்.

இதனால் 63-வயதிலும் இளைஞரணி தலைவராகவே இருக்கும் 93-வயது முதல்வர் வேட்பாளர் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் அமைச்சர் ஸ்மிருதி இரானி தன்னைத்தான் மறைமுகமாக அட்டாக் செய்வதாக நெருங்கியவர்களிடம் புலம்பி வருகிறார். இது குறித்து ஒரு உடன்பிறப்பு கூறும்போது “நம்ம ஊர் தாத்தா ” டை” அடித்துக் கொண்டு கலர் கலராக T ஷர்ட் / பேண்ட் போட்டுக்கொண்டு இளைஞர் அணித் தலைவராக ” நமக்கு நாமே” என்று திரிகிறார். அவரை விட ராகுல் இளையவர்தான்.ஸ்டாலின் இளைஞர் அணி தலைவராக இருக்கும் போது, ராகுல் இருப்பது தவறு இல்லை. கருணாநிதி உயிருடன் இருக்கும் வரை ஸ்டாலின் இளைஞர் தான். அதற்கு பின் ஸ்டாலின் பேரன் இளைஞர் பொறுப்பை ஏற்று கொள்வார்” என்று திமுகவின் பரம்பரையை எடுத்துக் கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks