பொன்.ராதாவுடன் டிராபிக் ராமசாமி சந்திப்பு – கூட்டணி கிடைத்த மகிழ்ச்சியில் பாஜக கொண்டாட்டம்

387

சென்னை: எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமையாவிட்டால் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. தனித்து போட்டியிட முடிவுசெய்த பாஜகவினருக்கு இன்ப அதிர்ச்சியாக நேற்று சமூக ஆர்வலரும், மக்கள் பாதுகாப்பு கழக தலைவருமான டிராபிக் ராமசாமி நேற்று காலை பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வந்தார். அப்போது அவர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசி தனது மக்கள் பாதுகாப்பு கழகத்தின் பாஜகவுடன் தேர்தல் கூட்டணிக்கு ஆலோசனை நடத்தினார்.

டிராபிக் ராமசாமி தங்களது கூட்டணிக்கு வந்தது குறித்து பாஜகவினர் மிகுந்த மகிழ்ச்சியில் திளைப்பதாகவும், சென்னை மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் வாண வேடிக்கைகளும், பட்டாசுகளும் கொளுத்தி கொண்டாடி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டிராபிக் ராமசாமியுடன் கூட்டணி குறித்து நிருபர்களிடம் கூறியதாவது: டிராபிக் ராமசாமி,பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர், வரும் தேர்தலில் எப்படியாவது 234 வேட்பாளர்களை தேடிப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது,. காங்கிரசைப் போல் வேறு மாநிலங்களில் இருந்து வேட்பாளர்களை கொண்டு வரும் நிலையில் நாங்கள் இல்லை என்றார்.

There are no comments yet