அன்பழகன்: தம்பி உங்க பேரு என்ன?
ஸ்டாலின்: அனைவருக்கும் தெரிந்ததுதானே,
அன்பழகன்: டி.வி ஷோவில் நாங்கள் பதில் தெரியாதது மாதிரிதான் கேள்வி கேட்போம். நீங்கள் நேயர்களுக்காக பதில் சொல்ல வேண்டும்”.
ஸ்டாலின்: அப்படியென்றால் ஸ்டாலின்.
அன்பழகன்: உங்கள் பெற்றோர்?
ஸ்டாலின்: உலகத்துக்கே விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வது எப்படி என்று கற்றுக்கொடுத்த (கடாபிக்கும் முன்னோடி) தானைத் தலைவர் கருணாநிதி.
அன்பழகன்: என்ன படிச்சிருக்கீங்க ?
ஸ்டாலின்: நான் எங்கப்பாவை மாதிரியே எம்.காம் படிக்க ஆசைப்பட்டேங்க. ஆனா முடியலை.
அன்பழகன்: என்னாது. உங்கப்பா எம்.காம் படிச்சிருக்காரா?
ஸ்டாலின்: இல்லைங்க. அவரும் ஆசைமட்டும்தான் பட்டாரு. ஆனா படிக்கலை
அன்பழகன்: சரி , கட்சியில பொறுப்புல ஏதும் இருக்கீங்களா?
ஸ்டாலின்: ஆமாங்க. இளைஞரணி செயலாளர் நாந்தாங்க.
அன்பழகன்: இளைஞரணியா. பாத்தா அப்படி தெரியலையே. சரி , உங்க வயசு என்ன ?
ஸ்டாலின்: இந்த 1 ம் தேதிதாங்க 24 முடிஞ்சி 25 ஆரம்பிச்சது.
அன்பழகன்: சரி, எத்தனை நாளா இளைஞரணி செயலாளரா இருக்கீங்க ?
ஸ்டாலின்: 40 வருஷமா இருக்கேங்க.
அன்பழகன்: தேர்தலுக்காக எவ்வளவு செலவு செய்ய முடியும்?
ஸ்டாலின்: தி.மு.க அரக்கட்டளை சொத்துக்கள் அனைத்துமே எங்கள் குடும்ப சொத்துதான். தேர்தலில் வெற்றிபெற எத்தனை ஆயிரம் கோடியும் செலவு செய்யத் தயார்.
அன்பழகன்: ஒருவேளை தேர்தலில் வெற்றி பெற்றால் என்ன என்ன செய்வீர்கள்? நீண்ட பதில் கூறவும்.
ஸ்டாலின்: 1. மன்னர் காலங்களில் அரச சபையில் நடைபெற்ற நாட்டிய நிகழ்சிகள் போல் சட்ட சபையிலேயே நடத்த (வயோதிகம் காரணமாக தலைவர் வெளியில் சென்று பார்க்க சிரமப் படுவதால்) ஏற்பாடு செய்வேன். 2. வாராவாரம் தாய்லாந்து சென்று வர சிரமமாக இருக்கும் என்பதால் சட்டசபை வளாகத்திலேயே “மசாஜ் நிலையம்” அமைக்க ஏற்பாடு செய்வேன். 3. எங்கள் குடும்ப உறுப்பினர்கள் தயாரிக்கும் / நடிக்கும் படங்கள் எவ்வளவு மொக்கைப் படமாக இருந்தாலும் வரிவிலக்கு (பொது மக்கள் காசுதானே) அளிப்பேன். 4. எங்கள் குடும்பமும், எங்களுக்கு ஜால்ரா அடிக்கும் குடும்பங்களும் உயர்வு பெற அனைத்து திட்டங்களும் வகுக்கப்படும். 5. தி.மு.க வினரால் நடத்தப்படும் மது தொழில் சாலைகள் நஷ்டம் அடையாமல் இருக்கும் பொருட்டு மதுவிலக்கை அமல்படுத்திவிட்டு எங்கும் கள்ளச் சாராயம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 6.எங்களுக்கு எதிரான செய்தியை வெளியிடும் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்படும். 7. எதிரிகள் நடை பயிற்சியின்போது கொல்லப்படுவார்கள்.
கருணாநிதி பெரிமிதத்துடன் மகனை உச்சி மோர்ந்து அணைத்துக் கொள்கிறார், அன்பழகன் மயங்கி, டமாரென கீழே விழுந்தார் .
There are no comments yet
Or use one of these social networks