புது டெல்லி: பல கோடி அளவுக்கு கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, சிபிஐ தகவலின்படி எப்போதோ வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்று கூறிய மத்திய அரசுக்கு, ரொட்டி திருடினால் அவரை அடித்து உதைத்து சிறையில் தள்ளுகிறோம். ஒரு பெரிய தொழிலதிபர் ரூ.9,000 கோடி மக்கள் பணத்தை ஏமாற்றியுள்ளார், அவர் முதல் வகுப்பில் தப்பிச் செல்ல நீங்கள் அனுமதித்துள்ளீர்கள் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், நான் ஒரு சர்வதேச தொழிலதிபர் என்பதால் வெளிநாடு சென்று வர வேண்டி உள்ளது. நான் வெளி நாடுகளுக்கு சென்று வருவது வழக்கம். அதன் அடிப்படையில் தான் வெளிநாடு சென்றுள்ளேன். ஒரு எம்.பி., என்ற முறையில் நான் இந்திய சட்ட திட்டத்தை பெரிதும் மதிப்பவன். ஊடகங்கள் என்னை பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. நான் இத்தனை ஆண்டுகளாக செய்த உதவிகள், சகாயங்கள், சலுகைகளை ஊடக முதலாளிகள் மறக்கக் கூடாது. என் மூலம் பல சந்தோஷங்களை அனுபவித்தார்கள். இவை எல்லாவற்றுக்குமே ஆவண ஆதாரங்கள், பயன் பெற்றவர்களின் பட்டியல்கள் என்னிடம் இருக்கின்றன. டிஆர்பி., ரேட்டிங்கை உயர்த்துவதற்காக இப்போது பொய்களை கூறுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, உண்மையைக் கூறிய மல்லையாவுக்கு ஆர்.எஸ்.எஸ் சிபாரிசின்படி பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை கேள்விப் பட்ட திமுக தலைவர் கருணாநிதி ‘மட்டற்ற மனிதர் மல்லையா, எனது நெருங்கிய நாண்பர், கிங் பிஷர் பீர் கொடுத்து ஊரைக் கெடுத்தவர், என்னைப் போல் விஞ்ஞாணமாக தப்பித்த அவருக்கு என் வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.
There are no comments yet
Or use one of these social networks