விஜயகாந்’த்தூ’ கைவிட்டதால் – கட்சிகளைத் தேடி ஸ்டாலினின் அடுத்த “நமக்கு நாமம்” பயணம்

257

சென்னை: கலைஞரை கோபாலபுரம் இல்லத்தில், திமுக பொருளாளர் ஸ்டாலின் சந்தித்து, அடுத்தகட்ட தேர்தல் நடவடிக்கை குறித்து பேசியுள்ளார். அப்போது, விஜயகாந்தை வழிக்கு கொண்டுவர முடியாதது குறித்து, ஸ்டாலினை கருணாநிதி, கடுமையாக கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில், தேமுதிக சேராததால் ஏற்பட்டுள்ள தொய்வை, சரிசெய்ய மீண்டும் எதாவது கமெடி செய்யுமாறு ஸ்டாலினுக்கு கருணாநிதி கட்டளையிட்டு இருக்கிறார்.

இதன்படி, ஸ்டாலின் மீண்டும் கூட்டணிக் கட்சிகளைத் தேடி கூட்டணிக்கு பயணம் போக இருக்கிறார். இதற்கு ‘நமக்கு நாமம்’ என பெயரிட்டுள்ளார். இத்திட்டத்தின் படி தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து தமிழ் நாட்டில் உள்ள லெட்டர் பேடு கட்சிகளை கண்டுபிடித்து அவர்களுடன் கூட்டணி அறிவிக்க முடிவு செய்துள்ளார். இந்த மெகா கூட்டணியை பார்த்தாவது விஜயகாந்’த்தூ’ தன்னுடன் சேருவார் என நம்பிக்கையுடன் உள்ளார். “நமக்கு நாமம்” திட்டத்திற்காக ஸ்டாலினும் அவரது ஆதரவாளர்களும் பூதக் கண்ணாடிகளுடன் கட்சிகளை தேடி ஊர் ஊராக அலைவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

There are no comments yet