விஜயகாந்த் உத்தரவின்படி மக்கள் நலக் கூட்டணியின் பெயர் மாற்றம்: “மானம் கெட்ட கூட்டணி” – வைகோ எழுச்சி முடிவு

326

மதுரை: தனித்து போட்டி என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்தாலும், அவர் மக்கள் நலக்கூட்டணிக்கு வருவார்; ஆதரவு தருவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம், தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்திக்க விருப்பம் தெரிவித்து அழைத்தால், நாங்கள் சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

கேலிச்சித்திரம் நன்றி: கார்டூனிஸ்ட் பாலா

மதுரையில் அவர் கூறியதாவது: மக்கள் நலக்கூட்டணியில் ‘தலைவர்’ என யாரும் இல்லை. நாங்கள் நான்கு பேரும் காமெடியன்கள் தான். மக்கள் நலக் கூட்டணி என்ற பெயர், விஜயகாந்திற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. , எனவே அவர் உத்தரவின்படி மக்கள் நலக் கூட்டணியின் பெயரை “மானம் கெட்ட கூட்டணி” என்று மாற்ற வைகோ முடிவு செய்துள்ளார். தமிழனுக்கு தன்மானம் முக்கியம் என்ற பெரியார், அண்ணா பரம்பரையில் வந்ததால் வைகோ வேறு வழியில்லாமல் இந்த முடிவு எடுத்துள்ளார். கூட்டணியின் பெயரை மாற்றிய பிறகாவது விஜயகாந்த் எங்களை அவருடன் சேர்த்துக் கொள்வார் என நம்புகிறோம் என்றார்.

There are no comments yet