சென்னை: அடிமைகள் திமுகவில் ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கைகள் தேர்தலுக்காக ஆரம்பம் என்று போயஸ் கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் சில அமைச்சர்களின் ஆதரவாளர்களை நீக்கி உத்திரவு பிறப்பித்த ஜெயலலிதா, புதிய அடிமைகளை கட்சியில் சேர்க்க முடிவு செய்துள்ளார். அவர்களுக்கு அதிமுகவின் அடிப்படை தகுதிகளான தாடி வளர்த்தல், மண்சோறு சாப்பிடுதல், கார் டயரை தொட்டு கும்பபிடுதல், ஹெலிகாப்டரை பார்த்து கும்பிடுதல், ஸ்டிக்கர் ஓட்டுதல், தேம்பி தேம்பி அழுது பதவி ஏற்றல் போன்றவற்றிக்கு பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஒரு அறிவு ஜீவி அடிமைகளை போல் மாடுகளும் “அம்மா அம்மா” என்று கத்துவதால், மாடுகளுக்கும் அதிமுகவில் இடம் வேண்டும், அவற்றையும், அதிமுக உறுப்பினராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த ஜெயலலிதா, “இது நல்ல யோசனை, இப்போது உள்ள அதிமுகவினருக்கும், மாடுகளுக்கும், அதிக வித்தியாசம் இல்லை, ரெண்டுமே ஒன்று தான் எனவே மாடுகளை உறுப்பினர் ஆக்க எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks