பாஜகவிற்கு ஆதரவாக ரஜினி மவுன பிரச்சாரம் – மோடி மஸ்தான் வேலை காட்டும் பாஜக

276

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் போதெல்லாம் நேரடியாகத் தேர்தலில் போட்டியிடாமல் தனது ரசிகர்களிடம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பான அறிவுரையை ரஜினிகாந்த் வழங்குவது வழக்கம். 1996, 2001 தேர்தல்களில் இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்த ரஜினி, அதன் பிறகு நடந்த தேர்தல்களின் போது ரசிகர்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்தார். தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்ட அந்தக் கட்சியின் மேலிடத் தலைவர்களை சந்தித்துப் பேச ரஜினிகாந்த் தரப்பில் இருந்து நேரம் கேட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் தேர்தலில் ரஜினி பாஜகவிற்கு ஆதரவாக மவுன பிரச்சாரத்தை மேற்கொள்வார் என செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் படி, ரஜினி வெறும் சைகை மூலமாக கை, கால்களை ஆட்டி பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பார் எனத் தெரிகிறது. இது குறித்து கூறிய ஒரு பாஜக தொண்டர் ‘ரஜினி சாதரணமா பேசினாலே யாருக்கும் புரியாது, இந்த லட்சணத்துல மவுன பிரச்சாரம்னா, தேர்தல் முடிவை இப்பவே தெரிந்து கொள்ளலாம்’ என்று கிண்டலடித்தார்.

There are no comments yet