திமுகவிற்கு லெட்டர் பேடு அடித்த 100 கட்சிகளும், லெட்டர் பேடு இல்லாத 200 கட்சிகளும் ஆதரவு – ஸ்டாலின் அறிவிப்பு

311

சென்னை: திருடர் முன்னேட்ற கழக (திமுக) கூட்டணிக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக நேற்றும் லெட்டர் பேடு அடித்த 100 கட்சிகளும், லெட்டர் பேடு இல்லாத 200 கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததாக ஸ்டாலின் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: இந்த 300 கட்சிகளும் எங்களுக்கு ஆளுக்கு ஒரு ஓட்டு போட்டால் கூட நாங்கள் வெற்றி பெறுவோம். ஆனால் இந்த கட்சிகளுக்கு நாங்கள் தலைவர் மற்றும் தொண்டர்களை ஏற்பாடு செய்யவேண்டும்.

திமுக கூட்டணிக்கு தேமுதிக வராததால் எந்த இழப்பும் இல்லை. விஜயகாந்தை பொறுத்தமட்டில், அவர் எடுக்கப்போகும் முடிவுகள் குறித்து அவருக்கே தெரிவதில்லை. குழப்பமே எனது இலக்கு எனச் சொன்ன உலகின் ஒரே நபர் விஜயகாந்த் மட்டுமே. ஆனாலும் தேமுதிகவை இழுக்கும் முயற்சியை, நங்கள் கைவிடவில்லை. கண்டிப்பாக விஜயகாந்த் எங்களுடன் சேர்ந்து டெபாசிட் இழப்பார் என நம்புகிறேன் என்று கூறினார்.

There are no comments yet