சென்னை: விஜயகாந்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், திமுக தலைவர் கருணாநிதியும் கூறியுள்ளனர். இதனால் இந்த இரண்டு கட்சிகளுடன் விஜயகாந்த் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கூறப்படுவதாவது: வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக சொல்லியும் விஸ்கிகாந்தை அனைத்து கட்சிகளும் சுற்றி வருவது அனைவரும் அறிந்ததே. தேமுதிமுக தனித்து போட்டி என்று அறிவித்தும்கூட, மக்கள் நல கூட்டணியும், பாஜகவும் மீண்டும் விஜயகாந்த் உடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று கூறியிருந்தன. இந்நிலையில் கருணாநிதி இன்று எழுதிய மடலில் “உடன் பிறப்பே நம்மை தில்லு முல்லு கட்சி என சொன்னாலும் நாம் சுய மரியாதையோடு பேச்சு நடத்துவோம். ஏனெனில் இது என் குடும்பத்தின் எதிர்கால பிரச்னை, கட்சியும் பதவியும் இல்லை எனில் என் குடும்பம் எப்படி பிழைப்பது” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
மானம் கெட்ட கூட்டணி தலைவர் வைகோவும், இன்று கூட்டணித் தலைவர்களுடன் விஜயகாந்தின் காலில் விழ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஸ்கிகாந்த் முதல்வர் பதவியில் கறாராக இருப்பதால் அவருக்கு புதுச்சேரியின் முதல்வர் பதவிதான் அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதிய தலைவர்கள் விஸ்கிகாந்தை புதுச்சேரிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
There are no comments yet
Or use one of these social networks