விஸ்கிகாந்தை முதல்வர் ஆக்காமல் விடமாட்டேன் – இந்த தேர்தலில் தனக்கு கண்டிப்பாக டெபாசிட் கிடைக்கும் என வைகோ நம்பிக்கை

216

சென்னை: கேப்டன் விஜயகாந்தை தமிழ்நாட்டின் வருங்கால முதல்வராக அறிவித்த மக்கள் நலக் கூட்டணி தலைவர் வைகோ, விஜயகாந்த் முதல்வராக தன் உயிரையையும் கொடுக்க தயாராக தெரிவித்தார். கோயம்பேட்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து, தேமுதிக- மக்கள் நல கூட்டணி தலைவர்கள் கூட்டணியை உறுதி செய்த பின்னர் வைகோ கூறியதாவது: விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து எங்களின் டெபாசிட்டை உறுதி செய்துள்ளோம்.

இந்த தேர்தலில் எப்படியும் விஜயகாந்த் மற்றும் மானம் கெட்ட கூட்டணி கட்சிகள் காணமல் போவதும் தெரியவரும். தேமுதிக உடன் மக்கள் நல கூட்டணி இணைந்தால் கூட்டணியை எப்படி அழைப்பீர்கள் என பலரும் என்னிடம் கேட்டனர், இதைத் தான் முன்பே சொல்லி விட்டோமே “மானம் கெட்ட கூட்டணி” என்று அழைக்கப்படும். எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும். எல்லா விவகாரங்களுக்கும் முதல்வர் வேட்பாளர் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை, ஏன் என்றால் அவருக்கு தமிழ் பேசத் தெரியாது. எனவே டப்பிங் வைத்துதான் அவர் பேசுவார். மானம் கெட்ட கூட்டணி என்ற பெயரை மாற்ற மாட்டோம் என்று கூறினார்,

There are no comments yet