விஸ்கிகாந்துடன் கூட்டணி ஏன்? – மனம் கெட்ட கூட்டணியின் ரணகள பதில்
வைகோ: இயல்பிலேயே கேப்டன் அவர்கள் என் மீது தனி மரியாதை கொண்டவர். சின்னக்கவுண்டர் படத்திலேயே எங்கள் சின்னமான பம்பரத்தை அழகாக சுகன்யாவின் தொப்புள் பகுதியிலே சுழலவிடுவார். அற்புதமானக் காட்சி. தட் இஸ் வொன்டர்புல் சீன் இன் தட் ப்லிம்…
கம்யூனிஸ்ட்கள்: இயல்பிலேயே கேப்டன் அவர்கள் கம்யூனிச சிவப்பு சிந்தனைகளில் ஊறியவர்.. இதற்கு எப்போதும் இரத்தச் சிவப்பாக இருக்கிற அவரது கண்களே சான்று.
குருமா: உள்ளபடியே பார்த்தால் சிறுத்தைகளின் மீது பேரன்பு கொண்டவர் திரு. விஜயகாந்த். வேங்கையின் மைந்தன் என்ற படத்தில் சிறுத்தையோடு நடித்திருப்பார். அதனால் தான் நாங்கள் அவருடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டோம்.
There are no comments yet
Or use one of these social networks