அட்லீஸ்ட் அழகிரியுடன் கூட்டணி – “இதயம் இனித்தது, கண்கள் பனித்தன” கடைசியில் கருணாநிதியுடன் ஒத்துப் போனார் ஸ்டாலின்

240

சென்னை: பழம் நழுவி கள்ளிப்பாலில் விழுந்துவிட்டதால், அப்செட் ஆன கலைஞரும் ஸ்டாலினும் கூட்டணிக்காக அலைந்ததில் அழகிரி சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து கோபாலபுர வட்டாரங்களில் கூறப்படுவதாவது: விஸ்கிகாந்தை எதிர்பார்த்து கண்கள் இரண்டும் பூத்துப் போயிருந்த கருணாநிதி, விஸ்கிகாந்த் மானம் கெட்ட கூட்டணியுடன் சேர்ந்த செய்தி கேட்டு ‘அடடே பழம் நழுவி கள்ளிப் பாலில் விழுந்து விட்டதே” என்று வருத்தப்பட்டுள்ளார்.

எப்படியாவது விஸ்கியை பழி வாங்கவேண்டும், இப்போதே ஒரு கூட்டணிக்கு ஏற்பாடு செய், உடனே அழகிரியை அழைத்து வா என்று கட்டளையிட்டார். ஹார்லிக்ஸ் திருடன் போல், வீட்டுக்கு ‘கொள்ளை’புறமாக வந்த அழகிரியைப் பார்த்த கலைஞருக்கு பேச்சு வரவில்லை. ‘இதயம் இனித்தது, கண்கள் பனித்தன’ படத்தின் இரண்டாம் பாகம்அங்கே அரங்கேற்றம் ஆனது.

இது குறித்து ஒரு திருடர் முன்னேட்ட கழக தொண்டர் கூறும்போது: திமுக விலேயே இல்லாத அழகிரி, தன் மகனே இல்லையென்று தந்தையால் ஒதுக்கப்பட்ட அழகிரி, விஸ்கி காந்த் தடம் மாறியதும், தேர்தல் களத்த்தில் இறக்கப்படுகிறார். வரும் தேர்தலில் அழகிரி இல்லாமல் தம்பியின் கும்பி கருகிவிடும் என வே அண்ணனுக்கு சமாதானம் செய்ய தம்பியின் கெஞ்சலுக்கு இணங்க தந்தை விளித்து தமையன் உதவி கேட்கப்பட்டது என்றார்.

There are no comments yet