தீ மிதித்து, மண் சோறு சாப்பிட்டால்தான் வேட்பாளர் டிக்கெட் – அடிமைகளுக்கு ஜெயா ஆணை

293

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமைச்சர்கள் பலருக்கு வேறு விதமான கேள்வி கள் எழுகின்றன. மீண்டும் சீட் கிடைக்குமா, அப்படியே கிடைத் தாலும் விரும்பிய தொகுதியில் போட்டியிட முடியுமா என்ற தவிப்பில் உள்ளனர். தற்போதைய எம்எல்ஏக்களில் பலருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்று கசிந்துவரும் தகவல்களும் அவர் களின் தவிப்பை அதிகரித்துள்ளது. ஐவர் அணி மூலம் தேர்தலில் சீட் பெற்று விடலாம் என்ற கனவில் இருந்த அவரின் ஆதரவாளர்களும் தங்களுக்கு சீட் கிடைக்குமா என்ற கலக்கத்தில் உள்ளனர்.firewalk

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் வேட்பாளர்களைச் சந்தித்து வரும் ஜெயா, நேர்காணலின் போது எத்தனை முறை தீ மிதித்தது, மண் சோறு சாப்பிட்டது போன்ற விபரங்களையும் கேட்டுள்ளததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் தீ மிதித்து, மண் சோறு சாப்பிட்டால்தான் வேட்பாளர் டிக்கெட் என அதிகாரபூர்வமாக ஜெயா அடிமைகளுக்கு ஆணையிடுவார் எனத் தெரிகிறது.

இதனால் கலக்கமடைந்துள்ள அடிமைகள், தமிழ்நாட்டில் எந்த கோவிலையும் விடாமல் தீ மிதிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

There are no comments yet