என் ஒரே புர்ச்சித் தலைவி அன்னை பிரேமலதா மட்டுமே – மனதைத் திறந்தார் வைகோ

1017

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து இன்று சென்னையில மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு மனம் திறந்த பேட்டி  அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: விஸ்கிகாந்த் என் அரசியல் ஆசான், திமுக, மற்றும் பாராதிய ஜனதா கட்சியினர் பல கோடி தருவதாக அவரிடம் பேரம் பேசினர், அனால் அதை எல்லாம் விட்டு விட்டு கொள்ளை ஒன்றே என்ற முடிவில் எங்களுடன் இணைந்துள்ளார். இன்று முதல்வர் பதவி வேண்டாம் என்று சொல்ல நான் ஒன்றும் பெரிய துறவி கிடையாது. அனால் என்ன இந்த தேர்தல் அல்ல எந்த தேர்தலில் நின்றாலும் என்னால் வெற்றி பெற முடியாது, முதல்வர் ஆக முடியாது. கேப்டன் ஒழிப்பு என்பதுதான் எங்களது எண்ணம். எனவே, விஸ்கிகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தோம், இந்த தேர்தலோடு அவர் காணமல் போவது உறுதி.vako

இன்று முதல் எனது ஒரே புர்ச்சி தலைவி அன்னை பிரேமலதா மட்டுமே. எங்களுக்கு 110 தொகுதிகள் கொடுத்த கருணைத் தாய். முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் மட்டுமே விதி 110-ஐ உபயோகித்து நடக்காத திட்டங்களை அறிவிப்பார், அதைப் போல் நாங்கள் வெற்றி பெறப் போவதில்லை என்று தெரிந்தும், எங்களுக்கு 110 தொகுதிகள் வழங்கிய தாயன்பு கொண்ட புர்ச்சி அன்னை பிரேமலதவின் காலடியில் சேவை செய்ய காத்திருக்கிறேன். எனது இந்த முடிவால் எனது கட்சிக் காரர்களுக்கும், தொண்டர்களுக்கும் பெரிய அளவில் மனவருத்தம் இருக்கலாம். ஆனால், தலைவர் சரியானதொரு முடிவைத்தான் எடுத்திருக்கிறார் என்பது இந்த தேர்தலில் நான் காணமல் போன பின்பு அவர்கள் உணர்வார்கள் என்றார்.

There are no comments yet