சூட்கேஸ் இல்லாமல் அம்மாவை அடுத்த ஜென்மம் வரை யாரும் சந்திக்க முடியாது – மத்திய அமைச்சருக்கு ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்

367

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவையோ, துறைகளின் அமைச்சர்களையோ சந்திக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு பலராலும் பல நாள்களாகக் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தில்லியில் அண்மையில் பேசும்போது, “பல மாநிலங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய மின் திட்டங்கள் தொடர்பாக அங்குள்ள முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களுடன் பேசிவருகிறேன். கடந்த 18 மாதங்களில் இப்படி 28 மாநிலங்களின் மின்துறை அமைச்சர்களை மட்டுமல்ல; முதல்வர்களுடன் கூட சந்தித்துப் பேச முடிந்தது. ஆனால், முதல்வர் ஜெயலலிதாவை இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த தலைமை அடிமை அமைச்சர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: த்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், கொயபல்சாக மாறி அம்மா மீது அவதூறு சொல்லியுள்ளார். தமிழ் நாட்டில் உள்ள சிறு குழந்தைக்கும் அம்மா சூட்கேஸ் இல்லாத யாரையும் சந்திக்க மாட்டார் என்று. தன் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அல்லும் பகலும் அயராது பாடுபடும் அம்மாவுக்கு தன் அடிமைகளின் கொள்ளைகளை கணக்கெடுக்கவே நேரமில்லை. வேண்டுமானால் அடுத்த ஜென்மத்தில் இந்த மாதிரி வீணாப் போனவர்களை சந்திக்க நேரம் ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

There are no comments yet