இந்தியாவின் ஜனாதிபதியாக அமிதாப், கவர்னராக ரஜினி – மக்களைக் கவர பாஜக அதிரடித் திட்டம்

866

புது டில்லி: நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக இந்தி நடிகர் அமிதாப் பச்சன் பெயரை பரிந்துரைக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தமிழ் நாட்டு மக்களை குஷிப்படுத்த ரஜினி காந்துக்கு கவர்னர் பதவியும் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

சரிந்து வரும் செல்வாக்கை தக்க வைக்க பிரதமர் மோடி உலகம் சுற்றும் வாலிபனாக பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுலா செல்வது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், வறுமை, வேலையின்மை மற்றும் வறண்டு வரும் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்தி நடிகர் அமிதாப் பச்சனை இந்தியாவின் ஜனாதிபதியாக நியமிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். அதுபோல் வரும் சட்ட மன்ற தேர்தலை மனதில் கொண்டு குழம்பி இருக்கும் தமிழர்களின் வாழ்வில் தாமரை மலர நடிகர் ரஜினி காந்தை கவர்னாராக நியமிக்கவும் பாஜக முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடியின் இந்த முடிவினால் இந்தியா விரைவில் வல்லரசாக உருவாகி அமெரிக்காவின் ஆணவப் போக்குக்கு முடிவு கட்டும் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

There are no comments yet